தமிழகத்தில் மீண்டும் முழு ஊராடங்கா?: வெளியான அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சீனா நாட்டில் உருவான கொரோனா நோயானது நாடு முழுவதும் பரவி ஒரு வித மற்றதையே ஏற்படுத்திவிட்டது. மேலும் இந்த அச்சம் காரணமாக தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அதனையடுத்து ஊரடங்கு தளர்வுகள் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வந்தன அதன் பிறகு தற்போது வரை நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வந்தது. அதனால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள்.
இந்நிலையில் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், குஜராத், கர்நாடகா மற்றும் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
தமிழகத்தில் மீண்டும் இன்று பாதிப்பு அதிகரித்து உள்ளதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.