வாலிபர் சராமரியாக வெட்டி படுகொலை-இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள்
திருவள்ளூர் அருகே வாலிபரை மர்ம நபர்கள் சராமரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரைச் சேர்ந்தவர் புகழேந்தி. இவரது மகன் காமேஷ். இவர் நேற்றிரவு வீட்டிலிருந்து வெளியே சென்று வருவதாகக் கூறி தனது டியோ இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது புதிய இருளஞ்சேரி ஆலமரம் அருகே சென்ற போது, பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் காமேஷை மடக்கி சராமரியாக வெட்டி படுகொலை செய்தனர்.
இதுகுறித்து, தகவலறிந்த திருவள்ளூர் போலீஸ் டிஎஸ்பி துரைப்பாண்டியன் தலைமையில் மப்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையா, சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து என்ன காரணத்திற்காக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். படுகொலை செய்து விட்டு தலைமறைவாகியுள்ள மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்தக் கொலையால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.