வெற்றி பெற்ற தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து - ரசிகர்கள் உற்சாகம்

wish cm stalin tamilnadu cricket team
By Anupriyamkumaresan Nov 23, 2021 05:32 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கிரிக்கெட்
Report

சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டியில் வெற்றிவாகை சூடிய தமிழ்நாடு அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வென்றது. கர்நாடகா அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை தக்க வைத்தது தமிழ்நாடு அணி.

வெற்றி பெற்ற தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து - ரசிகர்கள் உற்சாகம் | Tamilnadu Cricket Team Win Cm Stalin Praise

இந்நிலையில் வெற்றி பெற்ற தமிழ்நாடு அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தொடர்ந்து 2வது முறையாக வாகை சூடியிருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு என்னுடைய வாழ்த்துகள்.

ஷாருக் கான், சாய் கிஷோர் உள்ளிட்ட இளம் திறமையாளர்கள் சிறப்பான - துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். எல்லோரும் மேலும் உயரங்களை அடைய வாழ்த்துகிறேன் என்று பாராட்டியுள்ளார்.