தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

Cricket Council Tamilnadu
By Thahir Nov 28, 2021 02:06 PM GMT
Report

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக விரைவில் நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அடுத்து அவரது மகன் உதயநிதி ஸ்டாலினை அடுத்த முகமாக அவரது கட்சி நிர்வாகிகள் பார்த்து வருகின்றனர்.

புதிய திட்டங்கள் தொடங்கி வைப்பதற்கும், முக்கிய நிகழ்வுகளுக்கும் உதயநிதி ஸ்டாலினின் நேரத்தைத்தான் அமைச்சர்கள் முதல் எம்.எல்.ஏ.க்கள் வரை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

நேற்று தனது 44ஆவது பிறந்தநாளை கொண்டாடிய உதயநிதி ஸ்டாலினின் கைகளுக்கு திமுக இளைஞரணிச் செயலாளர் பதவி வந்த அடுத்த சில நாட்களிலேயே மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 

அதேபோல், சேப்பாக்கம்-திருவல்லிக்கேனி தொகுதியில் வெற்றி பெற்ற அவர் தொடர்ந்து தொகுதியில் ஆய்வு செய்து அனைவரது கனவத்தையும் ஈர்த்து வருகிறார்.

உதயநிதி ஸ்டாலினுக்கு கிரிக்கெட்டிலும்  முகுந்த ஆர்வம் கொண்டவர்.

அண்மையில், துபாயில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியை காண அவரது குடும்பமே சென்றிருந்தது.

இந்த நிலையில் விரைவில் தமிழக கிரிக்கெட் சங்கத் தலைவராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா தற்போது பிசிசிஐயின் செயலராக உள்ளார்.  

கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழாவில் ஜெய்ஷா கலந்து கொண்டார் என்பது குறிப்பிடதக்கது.