தமிழகத்தில் அமலுக்கு வருகிறதா இரவு நேர ஊரடங்கு? - முதல்வர் தலைமையில் கூடுகிறது கூட்டம்
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது நாளொன்றுக்கு கொரோனா தோற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக இரவு நேரத்தில் ஊரடங்கு செயல்படுத்துவது குறித்து தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள், பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்தநிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி இன்று தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகள் பங்கேற்க உள்ளார்கள்.
ஆலோசனை கூட்டத்திற்கு பின் தமிழகத்தில் புதிய கொரோனா நோய் கட்டுப்பட்டு வழிமுறைகள் வரலாம் என்றும், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.