இன்று 8வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் - தடுப்பூசியை செலுத்தும் மக்கள்
covid vaccine
camp today
By Anupriyamkumaresan
தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து மக்களை காக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் தமிழ்நாடு அரசு, 8ஆவது முறையாக மெகா தடுப்பூசி முகாமை நடத்துகிறது.
தலைநகர் சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 2 ஆயிரம் முகாம்கள் உள்பட மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மெகா கொரோனா தடுப்பூசி முகாமை மக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.