சிறுவர்களுக்கு கோவிட் தடுப்பூசியால் உண்டாகும் பக்கவிளைவுகளை எப்படி சமாளிப்பது? இதோ

corona-vaccine
By Nandhini Jan 10, 2022 05:57 AM GMT
Report

பெரியவர்களுக்கு தடுப்பூசி போடும் போது என்ன மாதிரியான பக்க விளைவுகள் ஏற்படுமோ, அதே போல குழந்தைகளுக்கும் வெளிப்படலாம். இதைக் கண்டு பெற்றோர்கள் பயப்படத் தேவையில்லை.

நாடு முழுவதிலும் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு கோவிட் தடுப்பூசி போடும் திட்டம் சில நாட்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, பள்ளிகளில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன. தடுப்பூசி போடப்படும் போது, தடுப்பூசியிலிருக்கும் மருந்து வேலை செய்கிறது என்பதற்குச் சான்றாக உடலில் சில பக்க விளைவுகள் ஏற்படும்.

பக்கவிளைவுகள் ஏற்படுவது, உடலுக்குள் ஆன்டிபாடிகள் உருவாகுவதை குறிக்கின்றன. பெரியவர்களுக்கு தடுப்பூசி போடும் போது என்ன மாதிரியான பக்க விளைவுகள் ஏற்படுமோ, அதே போல குழந்தைகளுக்கும் வெளிப்படலாம்.

சிறுவர்களுக்கு கோவிட் போடப்பட்ட பின்பு ஏற்படக்கூடிய மிக 2 பொதுவான பக்க விளைவுகள் காய்ச்சல் மற்றும் ஊசி போட்ட இடத்தில் ஏற்படும் வலி மற்றும் வீக்கமாகும். இரண்டு பக்க விளைவுகளுமே 2 அல்லது 3 நாட்களுக்குள் சரியாகிவிடும். சிலருக்கு சோர்வு தலைவலி மற்றும் தசை வலி ஆகியவை கோவிட் தடுப்பூசி போட்டபின் ஏற்படக்கூடும்.

இதுவும் தடுப்பூசி போட்ட பிறகு ஏற்படும் இயல்பான அறிகுறிகள்தான். பெரும்பாலானவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட 2 முதல் 4 நாட்களுக்குள் அறிகுறிகளின் தாக்கம் குறைந்துவிடும்.

2 நாட்களுக்கும் மேல் வலி அல்லது வீக்கம் அல்லது காய்ச்சல் குறையவில்லை என்றால் நீங்கள் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

தடுப்பூசி செலுத்திய பின் பிள்ளைகளை எவ்வாறு கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதைப் பார்ப்போம் -

தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட இடத்தில் கண்டிப்பாக ஓரிரு நாட்களுக்கு வலி இருக்கும். தடுப்புசி அந்த இடத்தை சுத்தமான துணியால் துடைத்து, கோல்ட் பேக் எனப்படும் அல்லது சில்லென்ற துணியை வைத்து வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க முயற்சி செய்யலாம். குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்ட பின்பு வலி நிவாரணியை கொடுக்கக்கூடாது.

கோவிட் தடுப்பூசியான கோவாக்சின் உற்பத்தி நிறுவனம் பாரத் பயோடெக் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்ட பின்பு வலியை அல்லது காய்ச்சலை குறைப்பதற்காக பாராசெட்டமால் மாத்திரையைக் கொடுக்க கூடாது.

குழந்தைகள் நீர் சத்து குறைபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். எனவே, திரவ உணவுகள் அல்லது ஆரோக்கியமான பானங்களுடன், போதுமான அளவு தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும்.

வாக்சின் போட்டுக்கொண்ட பின்பு ஓய்வு மிகவும் அவசியம். பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும்தான்.

எனவே, தடுப்பூசி செலுத்தப்பட்ட பிள்ளைகள் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட வேண்டும்.