தமிழகத்தில் புதிதாக 1,542 பேருக்கு கொரோனா பாதிப்பு

corona tamilnadu
By Irumporai Aug 27, 2021 12:52 PM GMT
Report

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,542 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 26 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் புதிதாக 1,542 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,08,748-ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் புதிதாக 21 பேர் பலியாகியுள்ளனர்.

 தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,835-ஆக அதிகரித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று 1,793 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 25,56,116-ஆக அதிகரித்துள்ளது.