தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 6,596 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 6,596 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,43,415 பேர் ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 396 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 166 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31,746 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 10,432 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 23,58,785 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய உதவி பிரதேச செயலாளரின் மரணம்...! மீண்டும் ஆரம்பமாகும் விசாரணை IBC Tamil

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan
