தமிழகத்தில் குறையும் கொரோனா .. இன்று 20,000க்குள் குறைந்த பாதிப்பு!
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 19 ஆயிரத்து 448 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
தமிழகத்தில் இன்று மட்டும் 19 ஆயிரத்து 448 பேருக்கு, தொற்று உறுதியாகியுள்ளது.
இத தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22 லட்சத்து 56 ஆயிரத்து 681 ஆக அதிகரித்துள்ளது.
இது வரை கொரோனா தொற்றில் இருந்து 31 ஆயிரத்து 360 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை 19 லட்சத்து 97 ஆயிரத்து 299 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருவது குறிப்பிடதக்கது.
அதே இன்று மட்டும் கொரோனா தொற்றால் 351 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 356 அதிகரித்துள்ளது.