தமிழ்நாட்டில் இன்று புதிதாக 739 பேருக்கு கொரோனா - 8 பேர் மரணம்

corona tamilnadu omicron
By Nandhini Dec 30, 2021 03:30 AM GMT
Report

சென்னையில் நேற்று 194 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று 294 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் இன்று 1,02,692 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனை முடிவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 739 ஆக பதிவாகியுள்ளது.

சென்னையில் மேலும் 294 பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 8 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். 614 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 45 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.