தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை 7,000-யை நெருங்குகிறது
covid
corona
tamilnadu
By Fathima
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,984பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,984பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,47,129 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 1,61,736 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 879 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,36,89,453 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொரோனா பாதிப்பால் இறந்தோர் எண்ணிக்கை 1,71,058 ஆக உயர்ந்துள்ளது.