கோவையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

By Irumporai May 28, 2021 03:20 PM GMT
Report

தமிழகத்தில் இன்று 31,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 09 ஆயிரத்து 700 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,255 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 74 ஆயிரத்து 539 ஆக உயர்ந்துள்ளது.

அதே சமயம் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 486 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக உயிரிழப்பு 400-ஐ தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று மேலும் 2,762 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்திலேயே அதிகபட்சமாக கோவையில் 3937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.