தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 21 ஆயிரத்தை கடந்து அதிர்ச்சியளித்துள்ளது
தமிழகத்தில் இன்று 21,228 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் 6,228 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 12,49,292. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 3,58,573 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 11,09,450. இன்று வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 34 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது.
அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 41,16,556. சென்னையில் 6,228 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது.
சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 15,000 பேருக்குத் தொற்று உள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் கொரோனா தொற்று 21 ஆயிரத்தை கடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன.