தமிழகத்தில் 28 ஆயிரத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு

corona cases increase tamilnadu
By Praveen May 09, 2021 08:07 PM GMT
Report

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 28 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிகரித்து வரும் சூழலில், தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரு நாளில் மட்டும் 236 பேர் உயிரிழந்துள்ளனர்.

அந்தவகையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

1,53,790 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒரே நாளில் தொற்று 28,897 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 28,869 வெளிமாநிலங்களில் இருந்து வந்த 29 பேர் என 28,897 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஒரே நாளில் 7,130 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் ஏற்கனவே 6,846 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 7,130 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் மேலும் 236 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,648 ஆக உயர்ந்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் 151 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 85 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணைநோய்கள் இல்லாத 47 பேர் உயிரிழந்தனர். 12 வயதிற்குபட்ட 1,012 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

ஏப்ரல் 5-ம் தேதி 128 சிறார்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவில் இருந்து மேலும் 23,515 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 12,20,064 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,44,547 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.