தமிழகத்தில் புதிதாக 26,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Corona
Details
Case
Tamilnadu
By Thahir
தமிழகத்தில் புதிதாக 26,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கொரேனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 28,156 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32,79,284 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 5,246 ஆக குறைந்துள்ளது.கோவை மாவட்டத்தில் 3,448 பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் 1,261 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில், 1,779 பேருக்கும், சேலம் மாவட்டத்தில் 1,387 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.