கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த.. அனைத்துக் கட்சி ஆலோசனை குழு.. தமிழக அரசு அறிவிப்பு!
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் அனைத்து கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களை கொண்ட ஒரு ஆலோசனை குழு அமைக்கப்பட்டது.
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்:
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் அடங்கிய 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனை குழுவானது அவசர அவசியம் கருதி நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசனைகள் பெற அவ்வப்போது கூடி விவாதிக்கும்.
இக்குழுவிற்கு பொதுத்துறை செயலாளர் உறுப்பினர் செயலராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் தலைமையில் பின்வரும் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்படுகிறது.
ஆலோசனைக் குழு உறுப்பினர்கள்:
1. மருத்துவர் நா.எழிலன்(திமுக)
2. மருத்துவர் சி. விஜய பாஸ்கர்(அதிமுக)
3. ஏ.எம். முனிரத்தினம்(காங்கிரஸ்)
4. ஜி.கே. மணி(பாமக)
5. நயினார் நாகேந்திரன்(பாஜக)
6. மருத்துவர் தி. சதன் திருமலைக்குமார்(பாஜக)
7. எஸ்.எஸ். பாலாஜி(விடுதலை சிறுத்தைகள் கட்சி)
8. வி.பி. நாகை மாலி(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)
9 தி. ராமசந்திரன்(இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
10. முனைவர் ஜவாஉறிருல்லா(மனித நேய மக்கள் கட்சி)
11. ரா.ஈஸ்வரன்(கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி)
12. தி.வேல்முருகன்(தமிழக வாழ்வுரிமை கட்சி)
13. பூவை ஜெகன் மூர்த்தி(புரட்சி பாரதம்