வெறும் 20 வாக்குகளுடன் வாக்குப்பதிவு நிறைவுப்பெற்ற தொகுதி..எது தெரியுமா?

people politics tamilnadu votes
By Jon Apr 07, 2021 09:52 AM GMT
Report

தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவுகள் இன்று காலை முதல் மிகவும் விறுவிறுப்பான நடைபெற்று தற்போது நிறைவுபெற்றுள்ளன. தமிழா சட்டமன்ற தேர்தல் இன்று காலை 7 முதல் விறுவிறுப்பாக நடைபெற்று மாலை 7 மணியுடன் நிறைவுபெற்றன. இந்த தேர்தலில் வாக்களிக்க முதல் தலைமுறை வாக்காளர்கள் முதல் வயதானவர்கள் வரையில் மிகவும் ஆர்வம் காட்டி தங்களது வாக்குகளை செலுத்தினர்.

இந்த நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதிக்கு உட்பட்ட காத்தரிக்குப்பதில் வெறும் 20 வாக்குகளுடன் (2%) நிறைவடைந்த வாக்குப்பதிவு. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகாவில் உள்ளது கத்தாரிகுப்பம் ஊராட்சி மக்கள் அங்குள்ள வாக்குச்சாவடியில் 20 பேர் மட்டுமே வாக்கு பதிவு செய்துள்ளனர். அப்பகுதியில் உள்ள டயர் தொழிற்சாலையை நிறந்தரமாக மூடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகூறி பார்த்தவர்கள் வாக்களிப்பதை மறுத்துள்ளனர் .

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகாவில் உள்ளது கத்தாரிகுப்பம் ஊராட்சி. இது வேலூர் காட்பாடி தொகுதிக்கு உட்பட்ட பகுதியாக உள்ளது. இங்கு வசிக்கும் 300 வீடுகளில் மொத்தம் 990 வாக்காளர்கள் உள்ளனர் இந்த கிராமத்தில் டயரை எரித்து அதில் இருந்து ரசாயனம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று உள்ளது.

இந்த தொழிற்சாலையில் டயர்களை எரிப்பதனால் இப்பகுதி மக்களுக்கு சுவாசப் பிரச்சனை ஏற்படுகிறது என்றும் இந்த தொழிற்சாலையை அகற்றக்கோரியும் இப்பகுதி மக்கள் பல முறை போராட்டத்தில் ஈடுபட்டும், மனுக்கள் கொடுத்தும் உள்ளனர். சமீபத்தில் ஏப்ரல். 01 அன்று கூட இந்த தொழிற்சாலையை அகற்றக் கோரி இப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இது வரை மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று நடைபெற்ற பொதுத்தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளனர்.

இங்கு இன்று காலை முதல் மாலை 7 மணிவரை 20 ஓட்டுக்கள் மட்டுமே பதிவாகி உள்ளது.ஆண்கள் 12 பேரும் பெண்கள் 8 பேரும் வாக்களித்துள்ளனர். மாலையில் வேலூர் மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் சித்ரா,சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் நேரில் சென்று தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டார்.