கி.ரா மீது நான் கொண்ட மரியாதையும், அவர் என் மீது கொண்ட அன்பும் எழுதித் தீரா - நடிகர் பார்த்திபன்
நான் கொண்ட மரியாதையும், அவர் என் மீது கொண்ட அன்பும் எழுதித் தீரா என்று நடிகர் பார்த்திபன், பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவிற்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
பிரபல மூத்த எழுத்தாளர் ‘கரிசல் குயில்’கி.ரா. என்கிற கி.ராஜநாராயணன் வயது மூப்பு காரணமாக காலமானார்.
அரசு மரி்யாதையுடன் கி.ரா.வின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்றும், கிரா.வுக்கு சிலை அமைக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கி.ராவின் மறைவிற்கு அரசியல் தலைவர்களும், சினிமா நட்சத்திரங்களும், முக்கிய பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கரிசல் இலக்கிய தந்தையுடன் பழகியது குறித்து இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், கீ.ரா- மனதை விட்டு மறையாது அவ்வெழுத்துகள்! நான் கொடுத்த cake-ஐ ருசித்து விட்டு பட்ஷனம் சுவையாக இருந்தது. பெயர்தான் தெரியவில்லை என்றார். தன் மண்ணை பற்றி காதலோடு நிறைய எழுதிய கி.ரா மீது நான் கொண்ட மரியாதையும், அவர் என் மீது கொண்ட அன்பும் எழுதித் தீரா! என்று பதிவிட்டுள்ளார்.