தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவிருப்பத்தை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. வருகிற 14ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடியின் பயண விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், காலை 7.50 மணிக்கு டெல்லியிலிருந்து புறப்படும் பிரதமர் மோடி காலை 10.35 மனிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வருகை தரவுள்ளார்.
[
அங்கிருந்து 11.15 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு வருகை தந்து, காவிரி - குண்டாறு இணைப்புத்திட்டம், மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்டவற்றை காணொலி வாயிலாக தொடங்கி வைக்கவுள்ளார். தொடர்ந்து 12.35 முதல் 12.50 வரை ஒய்வெடுக்கும் பிரதமர், 12.55 மணிக்கு மக்களை சந்தித்தவாறு விமான நிலையம் செல்லவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சுமார் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர், விமான நிலையம், அடையாறு ஐஎன்எஸ் மற்றும் நேரு உள்விளையாட்டரங்களில் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்படவுள்ளது.