Sorry: சட்டசபையில் மன்னிப்பு கேட்ட முதலமைச்சர் விஜய்

Dravida Munnetra Kazhagam
By Fathima Aug 17, 2026 08:56 AM GMT
Report

Tamilnadu CM Vijay Say Sorry in Assembly: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது தவெக அமைச்சர் ரஞ்சித் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பெயரை குறிப்பிட்டு பேசியது சர்ச்சையான நிலையில் முதலமைச்சர் விஜய் மன்னிப்பு கோரினார்.


தவெக அமைச்சர் ரஞ்சித் சர்ச்சை பேச்சு

நான்கு நாட்கள் விடுமுறை முடிந்து இன்று சட்டப்பேரவை கூடிய நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக எதிர்க்கட்சிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்ப விவாதம் சூடுபிடித்தது.

இதனை தொடர்ந்து மானியக்கோரிக்கை விவாதத்தின் போது தவெக அமைச்சர் ரஞ்சித் குமார் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பெயரை குறிப்பிட்டு பேசினார். இதற்கு திமுக-வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்,

மன்னிப்பு கேட்ட முதலமைச்சர் விஜய்

இந்நிலையில் முதலமைச்சர் விஜய் அமைச்சர் ரஞ்சித் கருணாநிதி பெயரை குறிப்பிட்டு பேசியதற்காக மன்னிப்பு கோரினார். அவர் பேசுகையில், திமுக தலைவரின் பெயரை குறிப்பிட்டு பேசியது தவறு தான், அவர் சார்பான நான் சாரி கேட்டுக்கிறேன் என கூறினார்.

Sorry: சட்டசபையில் மன்னிப்பு கேட்ட முதலமைச்சர் விஜய் | Tamilnadu Cm Vijay Say Sorry In Assembly