முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் - முதல்வர் விஜய் பதிவு

Vijay Mullivaikal Remembrance Day Chief Minister of Tamil Nadu
By Karthikraja May 18, 2026 01:11 PM GMT
Report

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் என முதல்வர் விஜய் பதிவிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவு

2009ஆம் ஆண்டு மே 18ம் தேதி ஈழப்போரின் இறுதிநாளில் முள்ளிவாய்க்காலில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

தமிழினப்படுகொலையை ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் திகதி உலகெங்கும் வாழும் தமிழர்கள், நினைவு கூர்ந்து வருகின்றனர். 

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் - முதல்வர் விஜய் பதிவு | Tamilnadu Cm Vijay Rememberence Mullivaikal

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யும் முள்ளிவாய்க்காலை நினைவு கூர்ந்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்! கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம்!" என குறிப்பிட்டுள்ளார்.