முதலிடம் பிடித்த தமிழ்நாடு - பிரபல நாளிதழுக்கு நன்றி தெரிவித்த முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின்

tamilnadu-cm thanks-twitter
By Nandhini Nov 29, 2021 09:31 AM GMT
Report

பிரபல ஆங்கில நாளிதழான ‘இந்தியா டுடே’ நடத்திய ஆய்வில் தமிழ்நாடு முதலிடம் பிடித்ததற்கு தமிழக முதலமைச்சர் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

பிரபல ஆங்கில நாளிதழான ‘இந்தியா டுடே’, பல்துறைகளிலும் சிறந்த முறையில் பணி செய்யும் மாநிலங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில், தமிழகம் முதலிடம் பிடித்திருக்கிறது.

2வது இடத்தை ஹிமாச்சல பிரதேசமும், 3வது இடத்தை பஞ்சாப்பும் பிடித்திருக்கிறது. இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘புகழ்பெற்ற IndiaToday இதழின் ஆய்வில், சிறப்பாகச் செயல்படும் பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாட்டுக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எனது நன்றி. #No1TamilNadu என்ற பெருமையைத் தக்கவைக்கவும்; பெரும் கடன்சுமையில் உள்ள தமிழ்நாட்டை மீட்கவும் இன்னும் கூடுதலாக உழைப்போம்!’ என பதிவிட்டுள்ளார்.