Tuesday, Jul 15, 2025

துபாயில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அட்டகாசமான புகைப்படம் வைரல்

stalin dubai tamilnadu-cm viral-photo மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் வைரல்-போட்டோ
By Nandhini 3 years ago
Report

துபாய் எக்ஸ்போவில் பங்கேற்க அரசு முறை பயணமாக சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய்க்கு சென்றுள்ளார். துபாய் சென்ற அவருக்கு அந்நாட்டிற்கான இந்திய துாதர் அமன் பூரி சிறந்த வரவேற்பு கொடுத்தார்.

துபாயில் கடந்த அக்டோபா் 1-இல் தொடங்கிய சா்வதேச தொழில் கண்காட்சி, வருகிற மாா்ச் 31-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இதனையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாயில் புலம்பெயர் தமிழர்களுடனான சந்திப்புகளுக்கும் துபாய் அரசு ஏற்பாடு செய்துள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அவர் அரசு முறை பயணமாக வெளிநாடு சென்றுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்வதற்காக துபாய் அரசு அதிநவீன வசதிகள் கொண்ட பிஎம்டபிள்யூ காரை வழங்கியுள்ளது.

இந்நிலையில், துபாயில் இருக்கும் தமிழக முதலமைச்சர் கோர்ட் சூட்டுடன் வலம் வரும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது, துபாயில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது. 

துபாயில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அட்டகாசமான புகைப்படம் வைரல் | Tamilnadu Cm Stalin Viral Photo Dubai

துபாயில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அட்டகாசமான புகைப்படம் வைரல் | Tamilnadu Cm Stalin Viral Photo Dubai