‘நெஞ்சுக்கு நீதி’ படத்தைப் பார்த்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - வைரலாகும் புகைப்படம்
‘ஆர்டிகிள் 15’ என்ற இந்தி படத்தை தமிழில் ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். ஆயுஷ்மான் குரானாவின் கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார்.
படத்தை போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் மே 20ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் தியேட்டர் ஒன்றில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்காக சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்படத்தை பார்த்த ஸ்டாலின், படக்குழுவினரை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
படம் நன்றாக உள்ளது. எனக்கு ரொம்ப பிடித்துள்ளது என்று தெரிவித்துள்ளார். தற்போது, சமூகவலைத்தளங்களில் இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.