நாவலர் நெடுஞ்செழியன் சிலையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

Opening Statue cm-stalin
By Nandhini Dec 26, 2021 05:26 AM GMT
Report

முன்னாள் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியனின் சிலையை சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டிருக்கும், மறைந்த முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியன் உருவச் சிலையை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் நாவலர் நெடுஞ்செழியனுக்கு சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் இடைக்கால முதலமைச்சராக நாவலர் நெடுஞ்செழியன் 3 முறை பதவி வகித்தவர்.

அதிமுக அவைத்தலைவராகவும் இருந்திருக்கிறார். எனவே, நாவலர் நெடுஞ்செழியனுக்கு சிலை அமைக்கப்படும் என சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், மறைந்த முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியன் உருவச் சிலையை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார். நாட்டுடையாக்கப்பட்ட நெடுஞ்செழியனின் நூல்களுக்கான நூலுரிமை தொகை ரூ.20 லட்சத்தை தமிழக முதலமைச்சர் வழங்கினார்.

நீதிக்கட்சியின் வரலாறு, மொழிப்போராட்டம் உள்ளிட்ட எண்ணற்ற நூல்களை நாவலர் நெடுஞ்செழியன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1920-ல் தஞ்சை திருக்கண்ணபுரத்தில் பிறந்த நாவலர் நெடுஞ்செழியன், 2000-ம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி மறைந்தார். 1967 முதல் கல்வி, நிதித்துறை உணவு என பல்வேறு துறைகளின் அமைச்சராக இருந்துள்ளார். 

நாவலர் நெடுஞ்செழியன் சிலையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் | Tamilnadu Cm Stalin Statue Opening

நாவலர் நெடுஞ்செழியன் சிலையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் | Tamilnadu Cm Stalin Statue Opening