மக்கள்தான் எஜமானர்கள் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

tamilnadu Speech மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் CM-Stalin பேச்சு
By Nandhini Mar 11, 2022 05:31 AM GMT
Report

சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அலுவலர்களுக்கு 3 நாள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

2-வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு தொடங்கியது.

அப்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும், மக்கள்தான் எஜமானர்கள் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. ஆகவே ஒரு ரூபாய் செலவு செய்தால் அந்த ஒரு ரூபாய் சிந்தாமல் சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பொருட்கள் கிடைக்கிறது.அவற்றை எப்படி சந்தைப்படுத்தி அரசுக்கு வருமானம் பெறுவது, அனைவருக்கும் பயனளிக்கும் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் கருத்துக்களை எல்லாம் தெரிவிக்கலாம் கருத்துக்களை கேட்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன் என்றார். 

மக்கள்தான் எஜமானர்கள் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Tamilnadu Cm Stalin Speech