நீட் விலக்கு மசோதா - இன்று ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நீட் விலக்கு மசோதா குறித்து இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க இருக்கிறார்.

தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் பட்ஜெட் தொடரின்போது, நீட் தேர்வு விலக்கு மசோதா கடந்த மாதம் 14-ம் தேதி நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்த நீட் விலக்கு மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக ஏற்கனவே அனுப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆளுநரை சந்தித்து பேச இருக்கிறார். இன்று மாலை 5 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளார். 

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்