ரேஷன் கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்துக்கு அருகில் பிரதமர் மோடி படத்தை மாட்டிய அண்ணாமலை
நேற்று சமூகவலைத்தளத்தில் வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில், ரேஷன் கடையின் சுவரில் பிரதமர் மோடி படம் மாட்டிவைக்கப்பட்டிருந்தது.
இதைப் பார்த்த திமுகவைச் சேர்ந்த ஒருவர், பெண் ஊழியரை தள்ளிவிட்டு, அவரை திட்டி பிரதமர் மோடியின் படத்தை சுவரிலிருந்து கழற்றச் சொல்கிறார்.
பிறகு, அந்த பெண் ஊழியர்கள் இவர்களை திட்டுவதைப் பார்த்து பயந்து சுவரிலிருந்து மோடி படத்தை கழற்றினார். இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது.
இதைப் பார்த்த நடிகை காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்து, இதை நான் கண்டிக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார். இச்சம்பவத்திற்கு சமூகவலைத்தளங்களில் பாஜகவினர் கண்டங்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், இன்று கோவையில் ரேஷன் கடை ஒன்றில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்துக்கு அருகில் பிரதமர் மோடியின் படத்தை மாட்டினார்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
What the heck? I condemn this. pic.twitter.com/XGXgs9kh4S
— Gayathri Raguramm ??? (@BJP_Gayathri_R) April 13, 2022