‘என் தொண்டர் ஒருத்தர் மீதும் கை வைத்தால்... நான் பார்த்து சும்மா இருக்க மாட்டேன்...’ - கண்கள் சிவந்த மு.க.ஸ்டாலின்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியே வர முடியாத அளவிற்கு அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இதற்கான காரணம் திமுக வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற நாள் முதல் அதிமுகவினரிடம் மென்மையாகத்தான் கையாண்டு வருகிறார். அதிமுக அரசியல் வாதிகள் மீது மு.க.ஸ்டாலின் அப்போதே ஊழல் புகார் கொடுத்திருந்தார்.
அப்போ கொடுத்த ஊழல் புகாரைத்தான் லஞ்ச ஒழிப்புத்துறை தற்போது ரெய்டு மட்டுமே நடத்தி வருகிறார்கள். ஆனால், போலீசார் யாரையும் அதிரடியாக கைது செய்யவில்லை.
கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மு.க.ஸ்டாலினையும், மகன் உதயநிதி ஸ்டாலினையும் கடுமையாக விமர்சனம் செய்து தாக்கி பேசினார். அப்போதும் மு.க.ஸ்டாலின் அதை கண்டுக்கொள்ளவில்லை.
ஆனால், கடந்த 19ம் தேதி நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக தொண்டர் மேல் கை வைத்து அடித்து, அரை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக கூட்டிச் சென்ற சம்பவம் தமிழக முதலமைச்சரை பாதித்து விட்டது.
இதனால்தான், இரவோடு இரவாக பட்டினம்பாக்கத்தில் உள்ள ஜெயக்குமார் வீட்டிற்கு அத்தனை போலீசார் அதிரடியாக நுழைந்து இரவோடு இரவாக 12 மணிக்கு கைது செய்து நீதிபதி முன் நிறுத்தி பூந்தமல்லி சிறையில் அடைத்துவிட்டனர்.
இதுமட்டும் இல்லாமல், ஜெயக்குமார் ஜாமீனில் வெளியே வர முடியாத அளவிற்கு அடுத்தடுத்து வழக்குகளும் பாய்ந்து வருகிறது.
‘என்னைப் பற்றி என்ன பேசினாலும், எனக்கு கவலை இல்லை... ஆனால், என் தொண்டன் ஒருவன் மீதும் யாராவது கை வைத்தால்.. நான் பார்த்து சும்மா இருக்க மாட்டேன்’ என்பதை தமிழக முதலமைச்சர் நிரூபித்து காட்டியிருப்பதாக திமுக வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.