துபாயின் பொருளாதார அமைச்சருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

tamilnadu dubai மு.க.ஸ்டாலின் CM-stalin
By Nandhini Mar 25, 2022 09:03 AM GMT
Report

துபாயில் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி உலக எக்ஸ்போ கண்காட்சி தொடங்கியது. அந்த கண்காட்சி மார்ச் 31 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.

இந்த கண்காட்சியில் தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் மார்ச் 25 முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துபாய் உலக எக்ஸ்போ கண்காட்சியில் தமிழ்நாடு வார நிகழ்வுகளை தொடங்கிவைத்து தமிழ்நாடு அரங்கினை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று துபாய் புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில், ஐக்கிய அமீரகத்தின் பொருளாதார அமைச்சர் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர்களுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

துபாயின் பொருளாதார அமைச்சருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை | Tamilnadu Cm Stalin Dubai