'அந்தச் சிறுவன் என்னைக் கவர்ந்தான்' - சிறுவனின் ஓவியத்தைப் பார்த்து வியந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சிறுவன் ஒருவன் வள்ளுவர் கோட்டத்தை ஓவியமாக வரைந்துள்ளான். அதை கையில் வைத்துக் கொண்டிருந்த சிறுவன் தமிழக முதலமைச்சர் காரில் வந்த போது, சிறுவன் ஒருவன் காரை நிறுத்தி தான் வரைந்த வள்ளுவர் கோட்ட ஓவியத்தை காண்பித்தான். அதைப் பார்த்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அச்சிறுவனை பாராட்டினார்.
இது குறித்து இத்தகவலை தனது டுவிட்டரில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். அதில், " கருணாநிதி அமைத்த வள்ளுவர் கோட்டத்தை வரைந்த மழலை, தமிழ் எழுத்துகள் உள்ள சட்டையோடு, தமிழ் வாழ்க எனக் காட்டி என்னைக் கவர்ந்தான். வளர்க அவர் திறமை என வாழ்த்துகிறேன். குழந்தைக்குத் தமிழுணர்வை ஊட்டி வளர்க்கும் உங்கள் குடும்பத்தையும் வாழ்த்துகிறேன்" என்று பாராட்டி பதிவிட்டுள்ளார்.
நம் உயிரோடு கலந்துவிட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அமைத்த வள்ளுவர் கோட்டத்தை வரைந்த மழலை, தமிழ் எழுத்துகள் உள்ள சட்டையோடு #தமிழ்வாழ்க எனக் காட்டி என்னைக் கவர்ந்தான்.
— M.K.Stalin (@mkstalin) February 22, 2022
வளர்க அவர் திறமை என வாழ்த்துகிறேன்!
குழந்தைக்குத் தமிழுணர்வை ஊட்டி வளர்க்கும் உங்கள் குடும்பத்தையும் வாழ்த்துகிறேன். https://t.co/ywklIlLjjN