அதிமுக ஆட்சியில் சென்னையை மட்டுமல்ல தமிழ்நாட்டையே சீரழித்து விட்டனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
அதிமுக ஆட்சியில் சென்னையை மட்டுமல்ல தமிழ்நாட்டையே சீரழித்து விட்டனர் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி கொடுத்துள்ளார்.
20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது தமிழகத்தில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து, தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் இரவிலிருந்து சென்னையில் பெய்து வரும் மழையால் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் வெள்ள நீரில் வாகனத்தை இயக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். சென்னை புளியந்தோப்பு, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கி நிற்கிறது. சாலைகள் படுமோசமாக உள்ளதால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று மதியம் வினாடிக்கு 100 அடி கனஅடி நீர் வெளியேற்றப்படும் என்று காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி அறிவித்துள்ளார்.
நேரில் ஆய்வு
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், தமிழக அமைச்சர்கள், எம்.ஏ.க்கள் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு வருகின்றனர். ஆவடி காவல்நிலையம் முன்பு தேங்கிய மழைநீரை அகற்றும் பணியை அமைச்சர் நாசர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாட்டையே சீரழித்து விட்டனர் - முதலமைச்சர்
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது, வடசென்னையில் தேங்கியிருக்கும் மழை நீர் குறித்து நிருபர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் தெரிவித்து தமிழக முதலமைச்சர் பேசுகையில், “கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் சென்னையை மட்டுமல்ல தமிழ்நாட்டையே சீரழித்து விட்டனர் என்றார்.