தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 69-வது பிறந்தநாள் - நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 69வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
தமிழக முதல்வருக்கு அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், தொண்டர்கள், சினிமாத்துறையினர் என பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இன்று காலை மெரினாவில் உள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணா, தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து, தனது பிறந்தநாளான இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கி வருகிறார்.
இவரின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், திமுகவினர் மக்களுக்கு இனிப்புகளும், கேக்கும் வெட்டி உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாளுக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.
இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
— Rajinikanth (@rajinikanth) March 1, 2022