கரித்தூளினால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரைந்த இளைஞன் - வைரலாகும் புகைப்படம்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 69வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
தமிழக முதல்வருக்கு அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், தொண்டர்கள், சினிமாத்துறையினர் என பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இன்று காலை மெரினாவில் உள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணா, தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து, தனது பிறந்தநாளான இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கி வருகிறார். இவரின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், திமுகவினர் மக்களுக்கு இனிப்புகள் கொடுத்தும், கேக்கும் வெட்டியும் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில், திருக்கோவிலூர் அருகே சிவனார் தாங்கல் பகுதியைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் செல்வம் என்பவர், பென்சில், பிரஸ் இல்லாமல் கரித்தூளினால் ரூ.500 நோட்டைக் கொண்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை வரைந்துள்ளார்.
தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.