குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய முதலமைச்சர் ஸ்டாலின் - வைரலாகும் புகைப்படம்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 69வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
தமிழக முதல்வருக்கு அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், தொண்டர்கள், சினிமாத்துறையினர் என பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இன்று காலை மெரினாவில் உள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணா, தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து, தனது பிறந்தநாளான இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கி வருகிறார்.
இவரின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், திமுகவினர் மக்களுக்கு இனிப்புகளும், கேக்கும் வெட்டி உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்.
இது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகனும், தமிழக சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், அரை நூற்றாண்டுக்கு மேலான அரசியல் பயணத்தில் பெரியார்-அண்ணா-முத்தமிழறிஞர்-பேராசிரியர் கொள்கை வழி நின்று, இந்திய கூட்டாட்சியின் அடையாளமாக, திராவிட மாடல் நல்லாட்சியை வழங்கிவரும் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திமுக இளைஞரணி சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
அரை நூற்றாண்டுக்கு மேலான அரசியல் பயணத்தில் பெரியார்-அண்ணா-முத்தமிழறிஞர்-பேராசிரியர் கொள்கை வழி நின்று, இந்திய கூட்டாட்சியின் அடையாளமாக, திராவிட மாடல் நல்லாட்சியை வழங்கிவரும் தலைவர் @mkstalin அவர்களுக்கு @dmk_youthwing சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறோம். #HBDTNCM pic.twitter.com/dqmDcHtImf
— Udhay (@Udhaystalin) March 1, 2022