4 நாள் பயணமாக துபாய்க்கு புறப்பட்டு சென்றார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்கும் வகையில், 4 நாட்கள் பயணமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் புறப்பட்டுச் சென்றார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் 'வேர்ல்டு எக்ஸ்போ 2020' என்ற சர்வதேச கண்காட்சி துபாயில் தொடங்கி இருக்கிறது. தற்போது, வரும் மார்ச் 31 நிறைவடைய உள்ளது.
இக்கண்காட்சியில் 192 நாடுகள் பங்கேற்றுள்ளன. துபாயில் ஒவ்வொரு நாடுகளுக்கு ஒவ்வொரு அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
அப்படி அமைக்கப்பட்டுள்ள இந்திய அரங்கில் மார்ச் 25ம் தேதி முதல் 31ம் தேதி வரை தமிழக அரசு சார்பில் அரங்குகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து, தமிழகத்திற்கான தொழில் முதலீட்டை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று, தனி விமானம் மூலம் துபாய் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.
தமிழக முதலமைச்சருடன், அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன், தொழில்துறை வழிகாட்டு குழு தலைவர் பூஜா குல்கர்னி உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.