இந்தியாவில் ஏற்றுமதியில் 3வது பெரிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
By Nandhini
சென்னை, டி.டி.கே. சாலை, கிரவுன் பிளாசா அடையார் பார்க் ஓட்டலில் இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் தென்பிராந்திய ஏற்றுமதி விருது வழங்கும் விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
சிறந்த ஏற்றுமதி நிறுவனங்களுக்கு விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது -
இந்தியாவில் ஏற்றுமதியில் 3வது பெரிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இது ஆண்டுதோறும் அதிகமாக வேண்டும். இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே என் லட்சியம். அமைச்சர் தங்கம் தென்னரசு தனது துறையை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.