திரைப்படமாகிறது மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு - இசையமைப்பாளர், இயக்குநர் யார்ன்னு தெரியுமா?

M K Stalin
By Nandhini May 03, 2022 11:34 AM GMT
Report

வெளியான தகவல் விளையாட்டு நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள் ஆகியோரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

தமிழில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘குயின்’ என்ற வெப் தொடரும், ‘தலைவி’ என்ற படமும் வெளியாகி மக்களிடம் அமோக வரவேற்பு பெற்றது.

இந்நிலையில், தற்போதைய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் தமிழக முதலமைச்சர் கலைஞரின் மகனாக இருந்தாலும், அரசியலில் படிப்படியாக முன்னேறி முதலமைச்சரானார் மு.க.ஸ்டாலின். மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவிக்கு வர மிகுந்த போராட்டங்களை சந்தித்தார்.

அவர் மிசாவில் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்ததிலிருந்து தற்போது முதலமைச்சர் ஆனது வரையிலான காலகட்டத்தில் அவர் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை மையமாக வைத்து திரைக்கதை உருவாக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தை பிரபல நடிகரும், கன்னி மாடம் படத்தின் இயக்குனருமான போஸ் வெங்கட் தான் இயக்க இருப்பதாகவும், இதில், மு.க.ஸ்டாலினாக நடிக்க சமுத்திரக்கனி ஒப்பந்தமாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. 

திரைப்படமாகிறது மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு - இசையமைப்பாளர், இயக்குநர் யார்ன்னு தெரியுமா? | Tamilnadu Cm Stalin