இலங்கை மக்களுக்கு உதவ அனுமதி - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி
தமிழக அரசின் நிவாரணப் பொருட்களை இலங்கை மக்களுக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், உயிர்காக்கும் மருந்துகள் வழங்க மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் கடந்த 29ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எழுதினார்.
அந்தக் கடிதத்தில், இலங்கை மக்களுக்கு உதவுவது தொடர்பான தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வழங்கும் நிவாரண பொருட்கள் தூதரகம் மூலம் இலங்கையிடம் ஒப்படைக்கப்படும்.நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கும், அதை வினியோகம் செய்வதற்கும் மத்திய அரசுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஒருங்கிணைந்து செயல்படலாம் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு நன்றி தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றதற்கு நன்றி. இதுபோன்ற மனிதாபிமான உதவிகள் இரு நாடுகளிடையே நல்லுறவை மேம்படுத்த உதவும் என்று பதிவிட்டுள்ளார்.