மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கானப் பாதை விரைவில் நிரந்தரமாக்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

tamilnadu-cm-stalin
By Nandhini Dec 29, 2021 03:43 AM GMT
Report

சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள தற்காலிகப் பாதை விரைவில் நிரந்தரமாக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

மாற்றுத்திறனாளிகளும் கடல் அலையை அருகே சென்று ரசிக்கும் வகையில் மெரினாவில் சாய்தள பாதை அமைக்கப்பட்டிருக்கிறது-

இதுகுறித்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த பதிவில் கூறியிருப்பதாவது - 

எத்தனை முறை சென்றாலும் கடல் சலிக்காததது என்றும், அதில் ஒரு முறையேனும் கால் நனைக்க நினைத்திருந்த மாற்றுத்திறனாளிகளின் எண்ணம் நனவாகும் வகையில் தற்காலிகப் பாதை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதை விரைவில் நிரந்தரம் ஆக்குவோம் என்றும் கூறியுள்ளார்.