சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை – பாதிக்கப்பட்ட இடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!
வடசென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும், சென்னை எழும்பூர், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ய இருக்கிறார். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இதனையடுத்து, சென்னையில் கோயம்பேடு, எழும்பூர், அண்ணா நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் நீர் தேங்கி இருக்கிறது.
இதனால், சென்னையில் உள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, வடசென்னை மற்றும் வில்லிவாக்கம் பகுதிகளில் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 40 டிரான்ஸ்பார்மர்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
எனினும், மழைநீர் வடிந்தவுடன் மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், விடிய விடிய பெய்த மழையால் வடசென்னை பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று பார்வையிடுகிறார்.
வட சென்னையில் பல இடங்களில் மழை நீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதித்திருக்கிறது. இந்நிலையில், மழை சேதங்களை நேரில் சென்று முதல்வர் ஆய்வு செய்ய இருக்கிறார்.