பழங்குடியின மாணவர்களின் ஊக்கத்தொகை ரூ.1 லட்சமாக உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு

tamilnadu-cm report--release
By Nandhini Nov 29, 2021 05:22 AM GMT
Report

பழங்குடியின மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக, திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றது.

அந்தவகையில் தற்போது, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவர்களின் முனைவர் பட்டப்படிப்பிற்கான ஊக்கத்தொகையை ரூ. 1 லட்சமாக தமிழக அரசு உயர்த்தி இருக்கிறது.

இதுகுறித்து நேற்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணை வருமாறு -

முழுநேர முனைவர் பட்டப் படிப்பிற்கான ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் இன மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ 2.5 லட்சத்திலிருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

மேலும், மாணவர்களின் எண்ணிக்கை 1200 லிருந்து 1600 ஆக உயர்த்தப்படுவதாகவும், ஒரு மாணவருக்கான ஊக்கத் தொகையினை ரூ. 50 ஆயிரத்திலிருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கென 2021 -22ம் ஆண்டு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் ரூ.16 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளது. 2020-21ம் ஆண்டில் முழுநேர முனைவர் பட்டப்படிப்பு ஊக்கத்தொகை திட்டத்தில் 1,124 பயனாளிகள் பயனடைந்திருக்கிறார்கள்.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பழங்குடியின மாணவர்களின் ஊக்கத்தொகை ரூ.1 லட்சமாக உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு | Tamilnadu Cm Report Release