மாவட்டங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!
நாளை சேலம், ஈரோடு, கோவை இந்த 3 மாவட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகளவில் பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. கொரோனா பிடியில் அரசியல் தலைவர்களும், சினிமா நட்சத்திரங்களும், பொதுமக்களும் சிக்கித் தவித்து வருகின்றனர்.
அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். போதுமான அளவு படுக்கைகள் இல்லாததால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கொரோனாவால் இறப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், தமிழக முதல்வர் சேலம், ஈரோடு, கோவை ஆகிய 3 மாவட்டங்களுக்கு நேரில் சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.