நிறைவேறுமா மூன்று விஷயங்கள்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்!

pm tamilnadu ops
By Jon Jan 18, 2021 06:23 PM GMT
Report

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் முதல்வர், காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் குறித்து பேசுகிறார். அத்துடன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவிற்கு பிரதமரை அழைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதிமுக பாஜக கூட்டணியையும் உறுதி செய்வது குறித்து பேசுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. வரும் ஏப்ரல் இறுதியிலோ அல்லது மே முதல் வாரத்திலோ தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது. காவிரி குண்டாறு இந்த முறை சட்டசபை தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. திமுகவுக்கு சவால் அளிக்கும் வகையில் அதிக நலத்திட்டங்களை பிரச்சாரத்தின் போது பட்டியிலிட விரும்புகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தை தொடங்கி வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். மனு அளிக்கிறார் அதற்கான நிதி உதவி கோரி பிரதமரிடம் பேச 2 நாள் பயணமாக இன்று மதியம் டெல்லி புறப்பட்டு செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. முதல்வருடன், தலைமைச்செயலாளர் சண்முகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் டெல்லி செல்கிறார்கள்.

பிரதமரை முதல்வர் இன்று சந்திக்கும் போது தமிழகத்துக்கான திட்டங்கள், நிதி விடுவிப்பு குறித்தும் கோரிக்கை மனுக்களையும் முதல்வர் அளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா நினைவிடம் அத்துடன் 79.75 கோடி ரூபாய் மதிப்பில் ஃபீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிடத்தின் கட்டுமானப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது.

எனவே அதன் திறப்பு விழாவிற்கு பிரதமரை அழைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அதிமுக பாஜக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் குறித்து ஏற்பட்ட சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து கூட்டணியை இறுதி செய்வார் என்றும் சொல்லப்படுகிறது.

டெல்லி பயணம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்புகளை முடித்துக்கொண்டு 19ஆம் தேதி மாலை சென்னை திரும்புகிறார் முதல்வர்.

முதல்வரின் இந்த பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.