'யார் ஆட்சியில் யார் படம் வைப்பது...' - முன்னாள் முதலமைச்சர் படங்கள் அகற்றம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஆவின் நிறுவனத்தில் இருந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, பழனிச்சாமி, பன்னீர் செல்வம் படங்களை தி.மு.க.வினர் அகற்ற கூறியதால் அவை அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
காரைக்குடி, ஆவின் நிறுவனத்தில், ஆய்வுக் கூட்டம், நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது, பால்வளத்துறை அமைச்சர் நாசர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
ஆவின் தலைவராக அ.தி.மு.க., வைச் சேர்ந்த அசோகன் இருக்றிர். அவர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. நிகழ்ச்சி நடைபெற்ற போது ஆவின் சேர்மன் அறைக்குள் தி.மு.க.,வினர் சென்றார்கள்.
அங்கு முன்னாள் முதல்வர்கள் படங்கள் இருந்தன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படம் அங்கு இல்லை. அ.தி.மு.க., வினர் படங்களை பார்த்த தி.மு.க.,வினர் அங்கிருந்த அலுவலர்களிடம் யார் ஆட்சியில் யார் படத்தை வைப்பது, உடனடியாக படத்தை அகற்றி விடுங்கள் என்று கூறினர். இதனையடுத்து, ஆவின் பணியாளர்கள் 3 படங்களையும் உடனடியாக அகற்றியுள்ளனர்.