இன்னார்க்கு இதுதான் என்பது ஆரியம், எல்லோருக்கும் எல்லாமும் என்பது திராவிடம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்!
இன்னார்க்கு இதுதான் என்பது ஆரியம், எல்லோருக்கும் எல்லாமும் என்பது திராவிடம் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
தேவர் ஜெயந்தி
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, மதுரைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். தொடர்ந்து, முத்துராமலிங்க தேவரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும், முத்துராமலிங்க தேவரின் படத்திற்கும் மரியாதை செலுத்தினார். மேலும், தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு முக்கிய தலைவர்கள் இன்று அஞ்சலி செலுத்த நினைவிடம் வருகின்றனர்.
மு.க.ஸ்டாலின் பேச்சு
இந்நிலையில் மரியாதை செலுத்திய பிறகு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது "தேவர் நினைவிடத்தில் அணையா விளக்கை அமைத்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. தேவர் ஜெயந்தியை அரசு விழாவாக நடத்தியவர் கருணாநிதி.
பசும்பொன்னில் 2 மண்டபங்கள் அமைக்கப்பட உள்ளன . தேவர் பெயரில் பல்வேறு இடங்களில் கல்லூரிகள் அமைய காரணமாக இருந்தவர் கருணாநிதி . ராமநாதபுரம் மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இன்னார்க்கு இதுதான் என்பது ஆரியம், எல்லோருக்கும் எல்லாமும் என்பது திராவிடம்" என்று கூறினார்.