ரொம்ப நன்றி சார்...இது என்னோட கடமை..முதலமைச்சரிடம் கள நிலவரங்களை எடுத்துக் கூறிய தமிழக மாணவர்கள்

MKStalin CMMKStalin TamilnaduCM MeetUkraineStudents
By Thahir Mar 07, 2022 06:38 PM GMT
Report

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24ஆம் தேதி தனது போரை தொடங்கி நடத்தி வருகிறது. இந்த தொடர் தாக்குதலால் உக்ரைன் நாடு நிலைகுலைந்துள்ளது.

அமெரிக்கா,பிரிட்டன்,பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் உக்ரைன் நாட்டுக்காக குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் இருந்து மருத்துவம் படிக்க சென்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் சிக்கி தவித்தனர்.

குறிப்பாக தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மருத்துவம் படிக்க மாணவர்கள் சென்ற நிலையில் போர் பதற்றம் காரணமாக மாணவர்களை மீட்க கோரி பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து தமிழக அரசு மாணவர்களின் பயண செலவை தமிழக அரசு ஏற்கும் என்றார். மேலும் இந்திய அரசு மாணவர்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து மத்திய அரசு ஆப்ரேசன் கங்கா திட்டத்தின் மூலம் உக்ரைனில் உள்ள மாணவர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது.

இதனிடையே உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.

மதுரை விமான நிலையம் செல்லும் வழியில் திருநெல்வேலி மாவட்டம் ஜோதிபுரத்தில், உக்ரைனில் மருத்துவ பட்டப்படிப்பு படித்து வரும் நிவேதிதா, திவ்யபாரதி, ஹரிணி, நவநீத ஸ்ரீராம் ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது உக்ரைனில் அவர்களது அனுபவம் மற்றும் அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.  

You May Like This