மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை
CMMKStalin
TamilnaduCM
MeetingCollectorPolice
By Thahir
மாவட்ட ஆட்சியர்கள்,காவல் கண்காணிப்பாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றது.
இந்நிலையில் தமிழகத்தில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று பதவிவேற்று வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர்கள்,காவல் கண்காணிப்பாளர்களுடன் காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
சட்ட ஒழுங்கு நடவடிக்கைகள்,நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து அவர் ஆலோசிப்பார் என தெரிகிறது.