திமுகவில் திடீர் பரபரப்பு..!முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்கும் மு.க.அழகிரி

CMMKStalin MKStalinBirthday TamilnaduCM M.K.AlagiriMeetMkStalin
By Thahir Mar 01, 2022 07:50 AM GMT
Report

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 69வது பிறந்த நாள் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா,கருணாநிதி நினைவிடத்தில் மலர் துாவி மரியாதை செலுத்தினார்.

திமுகவில் திடீர் பரபரப்பு..!முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்கும் மு.க.அழகிரி | Tamilnadu Cm Mk Stalin Birthday M K Alagiri

இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சென்னை அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் சேர்ந்து கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது சகோதரர் மு.க.அழகிரி சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மகன் மு.க.அழகிரியை கடந்த 2014-ஆம் ஆண்டு திமுகவில் இருந்த நீக்கினார்.

திமுகவில் திடீர் பரபரப்பு..!முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்கும் மு.க.அழகிரி | Tamilnadu Cm Mk Stalin Birthday M K Alagiri

இதையடுத்த திமுகவில் இணைவதற்கு மு.க.அழகரி முயன்ற நிலையில் அதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.

2019 சோக்சபா தேர்தலின் போது மு.க.அழகிரி தனி கட்சி தொடங்குவார் என்றெல்லாம் கூறப்பட்டுவந்தது. ஆனால் மு.க.அழகிரி திமுகவுக்கு எதிரான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்ற போது பதவியேற்பு விழாவில் மு.க.அழகிரியின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.ஆனால் மு.க.அழகிரி கலந்து கொள்ளவில்லை.

இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 69வது பிறந்த நாளையொட்டி அவருக்கு மு.க.அழகிரி இன்று மாலை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க மு.க.அழகிரி வர உள்ளதாக வெளியான தகவலால் திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

You May Like This